/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நமது வாக்கு, மனம், செயலை துாய்மையாக்குவதே திருமணம்' ஸ்ரீ சங்கரா நாராயண பீடதிபதி பேச்சு

ADDED : மே 27, 2024 02:15 AM

கோவை:கோவை ராமநாதபுரம் காமராஜ் நகரிலுள்ள, சாரதாம்பாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
இதில், திருவாரூர் ஸ்ரீ சங்கரா நாராயண பீடம் ஸ்ரீலஸ்ரீ குரு சிவாஜி சந்தோஷ் சுவாமிகள் பேசியதாவது:
திருமண வைபவம் என்பது, மனிதர்களின் வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வு. வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக்கொள்வதற்காகவும், ஆண், பெண் பரஸ்பர நல்லுறவுக்காகவும், உணர்வுகளை பகிர்ந்துகொள்வதற்கும், மேன்மைபடுத்திக்கொள்வதற்கும், ஒருவருக்கொருவர் வாக்கு, மனம், செயல் ஆகியவற்றை சுத்தப்படுத்திக்கொள்வதற்காகவும் மேற்கொள்ளப்படுகிறது.
வாழ்க்கையில் ஆணும், பெண்ணும் இணைந்து பயணிக்க வேண்டும், அறிவியல் தொழில்நுட்பம் மேம்பாடு அடைவது போல், நம் நாகரீகமும் ஆன்மிகமும் மேம்பாடு அடைந்து கொண்டேதான் இருக்கிறது.
வாழ்க்கை என்பது மிகவும் புனிதமானது. சுக துக்கங்களை கடந்து, சாதிக்க வேண்டும் என்ற மனப்பான்மையை பெறுவோம். இது, அடுத்து வரும் தலைமுறைக்கு வழிகாட்டுதலாக அமையும்.
இவ்வாறு, அவர் பேசினார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.