ADDED : மே 24, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:தமிழ் பாரம்பரிய தற்காப்பு கலைகளின் முப்பெரும் விழா ஜூன் 29ம் தேதி முதல் கே.பி.ஆர்., கல்லுாரியில் நடக்கிறது. இதில் பங்கேற்க பாரம்பரிய கலைகளின் ஆசான்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி, உலக களரி பெடரேஷன், இந்திய களரி பெடரேஷன் சார்பில், சிலம்பம், அடிமுறை, களரிபயட்டு, குத்துவரிசை, வர்மம் ஆகிய பாரம்பரிய கலைகளுக்கான முப்பெரும் விழா கல்லுாரி வளாகத்தில் ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. இந்த முப்பெரும் விழாவில் ஆசான்களுக்கு விருது வழங்குதல், கருத்தரங்கம், பயிலரங்கம் நடக்கின்றன.
இதில் பங்கேற்க பாரம்பரிய கலைகள் ஆசான், வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விபரங்களுக்கு 99442 74592, 97867 67157 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.