/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மசாலா 'லே அவுட்' துார் வாரும் பணியில் வேண்டும் அதிக 'காரம்' மாநகராட்சி கமிஷனரிடம் எம்.எல்.ஏ., மனு
/
மசாலா 'லே அவுட்' துார் வாரும் பணியில் வேண்டும் அதிக 'காரம்' மாநகராட்சி கமிஷனரிடம் எம்.எல்.ஏ., மனு
மசாலா 'லே அவுட்' துார் வாரும் பணியில் வேண்டும் அதிக 'காரம்' மாநகராட்சி கமிஷனரிடம் எம்.எல்.ஏ., மனு
மசாலா 'லே அவுட்' துார் வாரும் பணியில் வேண்டும் அதிக 'காரம்' மாநகராட்சி கமிஷனரிடம் எம்.எல்.ஏ., மனு
ADDED : மே 10, 2024 01:37 AM
கோவை:வெங்கிட்டாபுரத்தில் தடாகம் ரோட்டின் இருபுறமும், சாக்கடை கால்வாய் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, கோவை மாநகராட்சி கமிஷனரிடம், கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, எம்.எல்.ஏ., கொடுத்த மனு:
கோவை வடக்கு மற்றும் தெற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்கள், இரு ஆண்டுகளாக பராமரிப்பின்றி, புதர்மண்டிக் கிடக்கின்றன. இவற்றை சுத்தம் செய்து, பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இடங்களில், புதிதாக போர்வெல் அமைத்து, தண்ணீர் வினியோகிக்க வேண்டும்.
சத்தி ரோட்டில் டெக்ஸ்டூல் பாலத்தில் இருந்து சூர்யா மருத்துவமனை வரை, ரோடு போடும் பணியை விரைந்து துவக்க வேண்டும்.
வெங்கிட்டாபுரத்தில் தடாகம் ரோட்டின் இருபுறமும் சாக்கடை கால்வாய் மீது ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற வேண்டும்.
சங்கனுார் மின் மயானம் கட்டப்பட்டு மூன்றாண்டுகளாகி விட்டது. சுற்றுச்சுவர் மற்றும் ஈமச்சடங்கு செய்வதற்கு இடம் ஒதுக்காததால், பயன்பாட்டுக்கு கொடுக்க முடியாத நிலை உள்ளது. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஜெயப்பிரகாஷ் நகரில் உள்ள மயானத்தை சுத்தப்படுத்தி, தண்ணீர் வசதி செய்ய வேண்டும்.
புலியகுளம் மசால் லே-அவுட்டில், சாக்கடை கால்வாய் துார்வாரும் பணி டெண்டர் விட்டு ஓராண்டாகி விட்டது; அவ்வேலையை துரிதப்படுத்த வேண்டும்.
மசால் லே-அவுட்டில் உள்ள, மாநகராட்சி சமுதாய கூடத்தில் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் தங்குகின்றனர். சமுதாய கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்.
வார்டு எண்: 64ல் திருவள்ளுவர் நகர் இறக்கத்தில் இருந்து, பாலாஜி நகர் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.