/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாசாணியம்மன் கோவில் உண்டியல் திறப்பு
/
மாசாணியம்மன் கோவில் உண்டியல் திறப்பு
ADDED : மார் 07, 2025 10:41 PM
ஆனைமலை; ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக, ஒரு கோடியே, 40 லட்சத்து, 70 ஆயிரத்து, 848 ரூபாய் இருந்தது.
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இங்கு, உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவு வந்து செல்கின்றனர்.
பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில், நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், சலவநாயக்கன்பட்டி ஊர் பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
தட்டு காணிக்கை உண்டியலில், 32 லட்சத்து, 53 ஆயிரத்து, 32 ரூபாய், நிரந்தர உண்டியலில், ஒரு கோடியே, 8 லட்சத்து, 17 ஆயிரத்து, 816 ரூபாய் என மொத்தம், ஒரு கோடியே, 40 லட்சத்து, 70 ஆயிரத்து, 848 ரூபாய் இருந்தது.
மேலும், தங்கம் - 286 கிராம், வெள்ளி - 840 கிராமும் இருந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், பேரூர் பட்டீஸ்வரசுவாமி கோவில் உதவி ஆணையர் விமலா, மாசாணி அம்மன் கோவில் உதவி ஆணையர் விஜயலட்சுமி, தக்கார் பிரதிநிதி கார்த்திக்கேயன், கண்காணிப்பாளர் புவனேஸ்வரி, ஆய்வர் சித்ரா மற்றும் பொள்ளாச்சி ஆய்வர் கோகிலவாணி ஆகியோர் பங்கேற்றனர்.