/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாதா ஆலய தேர்த்திருவிழா கருமலையில் கோலாகலம்
/
மாதா ஆலய தேர்த்திருவிழா கருமலையில் கோலாகலம்
ADDED : செப் 10, 2024 02:21 AM

வால்பாறை:கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வால்பாறை அடுத்துள்ள கருமலை எஸ்டேட் வேளாங்கண்ணி மாதா ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கடந்த, 1ம் தேதி திருஇருதய ஆலய பங்கு தந்தை ஜெகன்ஆண்டனி தலைமையில் திருக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து ஆலயத்தில் திருப்பலி, சிறப்பு ஜெபவழிபாடு நடந்தது.
விழாவில், கடந்த, 7ம் தேதி மாலை, 5:30 மணிக்கு ஆடம்பரக்கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, கருமலை, வெள்ளமலை எஸ்டேட் பகுதியிலிருந்து அன்னை வேளாங்கண்ணி மாதா சொரூபம் தாங்கிய தேர்பவனி ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.
தேர்த்திருவிழாவில், கருமலை, வெள்ளமலை, ஊசிமலை, அக்காமலை பகுதியை சேர்ந்த நுாற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில், நேற்று முன்தினம் 8ம் தேதி அன்னை வேளாங்கண்ணி மாதா பிறந்த நாள் மற்றும் தேர்த்திருவிழாவை முன்னிட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. நவநாள் ஜெபவழிபாடும் நடந்தது. விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.