ADDED : ஜூன் 25, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்களை, மேயர் கல்பனா துவக்கி வைத்தார்.
கோவை மாநகராட்சி சார்பில், பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்தன. கந்தசாமி நகர் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில், ரூ.21 லட்சம், காமராஜர் நகர் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் ரூ.41.70 லட்சம் என, மொத்தம், ரூ.62.70 மதிப்பிலான கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
மாநகராட்சி மேயர் கல்பனா, கூடுதல் வகுப்பறை கட்டடங்களை நேற்று திறந்து வைத்தார்.
இதேபோல், சுகுணாபுரம் பகுதியில், பாலமுருகன் கோவில் சந்திப்பு முதல், எஸ்.எஸ்.கார்டன் வரை கட்டப்பட்டு வரும், தடுப்பு சுவர் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.