/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆற்று வெள்ளத்தில் மான் கூட்டம் சிக்காமல் இருக்க நடவடிக்கை
/
ஆற்று வெள்ளத்தில் மான் கூட்டம் சிக்காமல் இருக்க நடவடிக்கை
ஆற்று வெள்ளத்தில் மான் கூட்டம் சிக்காமல் இருக்க நடவடிக்கை
ஆற்று வெள்ளத்தில் மான் கூட்டம் சிக்காமல் இருக்க நடவடிக்கை
ADDED : ஆக 01, 2024 01:00 AM
மேட்டுப்பாளையம் : பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, ஆற்றுக்கு அருகில் வரும் மான் கூட்டம், வெள்ளத்தில் சிக்காமல் இருக்கவும், வேட்டையாடப்படாமல் இருக்கவும், வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நீலகிரி மற்றும் கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக, பில்லூர் அணை நான்காவது முறையாக நிரம்பி, பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனப்பகுதிகளை பவானி ஆறு கடந்து செல்கிறது.
இவ்விரண்டு வனப்பகுதிகளிலும் மான்கள் அதிகம் காணப்படுகிறது. தேக்கம்பட்டி, சமயபுரம், ஓடந்துறை, கோத்தகிரி சாலை, பவானிசாகர் நீர்பிடிப்பு பகுதிகளில் மான் கூட்டம் உலா வருவதும், பவானி ஆற்றை கடந்து செல்வதும், அதில் தண்ணீர் குடிப்பதும் வழக்கமான நிகழ்வாக உள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக வனப்பகுதியையொட்டி செல்லும் பவானி ஆற்றில் தண்ணீர் குடிக்க வரும் மான் கூட்டம், ஆற்றுக்கு அருகில் நிற்கிறது. ஆற்றை கடக்க முடியாமல் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்கிறது.
அவ்வாறு வரும் மான் கூட்டங்கள் ஆற்று வெள்ளத்தில் சிக்க வாய்ப்புள்ளது. அதே சமயம் மான் கூட்டங்கள் ஆற்றங்கரையில் நிற்பதால், அதனை வேட்டையாடவும் வாய்ப்புள்ளது. இதனை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் கூறுகையில், பொதுவாக மழை பெய்தால் மான் கூட்டம் வனப்பகுதியை விட்டு வெளியே வராது. சில சமயம் வரலாம். அவ்வாறு வரும் மான் கூட்டம் ஆற்று வெள்ளத்தில் சிக்காமல் இருக்க, மான் அதிகம் வரும் பகுதியில் வனப்பனியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அதே போல் வனப்பகுதிகளில் வேட்டையாடும் கும்பல் நடமாட்டம் குறித்தும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம்,என்றார்.---