/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுவதை தடுக்க நடவடிக்கை
/
குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுவதை தடுக்க நடவடிக்கை
குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுவதை தடுக்க நடவடிக்கை
குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுவதை தடுக்க நடவடிக்கை
ADDED : ஜூன் 06, 2024 11:18 PM
அன்னுார்:குடியிருப்புகளுக்குள் மழைநீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அன்னுார் பேரூராட்சி 5 வது வார்டில் புவனேஸ்வரி நகர், பழனி கிருஷ்ணா அவென்யூ உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசிக்கின்றனர். சில நாட்களுக்கு முன் பெய்த கன மழையினால், அன்னுார் கோவன் குளத்தில் தண்ணீர் நிரம்பி, வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக நேற்று அன்னுார் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய் துறையினர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும், அப்பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அன்னுார் கோவன் குளத்தில் இருந்து நிரம்பி வழியும் தண்ணீரை, அல்லி குளத்திற்கு கொண்டு செல்ல முடியுமா, கோவன் குளத்தில் நிரம்பும் தண்ணீர் குடியிருப்புகளுக்குள் செல்லாமல் இருக்க, நீர் வழித்தடங்களை ஆய்வு செய்து, தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடும் பட்சத்தில் போர்கால அடிப்படையில் மோட்டார்கள் வாயிலாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என அதிகாரிகளை வருவாய் கோட்டாட்சியர் கேட்டுக் கொண்டார்.