/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மாணவர்களுக்கு மாநில தடகளத்தில் பதக்கம்
/
கோவை மாணவர்களுக்கு மாநில தடகளத்தில் பதக்கம்
ADDED : மே 24, 2024 01:14 AM

கோவை;சென்னையில் நடந்த மாநில அளவிலான யூத் தடகளப்போட்டியில் கோவையை சேர்ந்த மாணவர்கள் பதக்கங்கள் வென்று அசத்தினர்.
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 5வது தமிழ்நாடு மாநில யூத் தடகள சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டி சென்னை தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலையில் நடந்தது.
100மீ., 200மீ., 400மீ., 800மீ., நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி ஏறிதல், நடையோட்டம், மும்முறை தாண்டுதல், போல் வால்ட், ரிலே உள்ளிட்ட தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
கோவை கேலோப் அதலெடிக் அகாடமியில் பயிற்சி பெறும் கிருஷ்ணம்மாள் கல்லுாரி மாணவி இலக்கியா, ராமகிருஷ்ணா பள்ளியில் 12ம் வகுப்பு முடித்துள்ள பிரசாந்த் ஆகியோர் உயரம் தாண்டுதலில் பங்கேற்றனர்.
இதன், 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் பிரசாந்த் 1.94மீ., தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார். இதேபோல், 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் மாணவி இலக்கிய 1.58மீ., தாண்டு தங்கம் வென்றார்.
வெற்றி பெற்ற மாணவர்களை பயிற்சியாளர் பிரதீப் ராஜ்குமார், கிருஷ்ணம்மாள் கல்லுாரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் பாராட்டினர்.