ADDED : மார் 11, 2025 04:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : பி.ஆர்.ஜே., ஆர்த்தோ சென்டர் மற்றும் மேக் மருத்துவமனை சார்பில், மகளிர் தினத்தை முன்னிட்டு, இலவச மருத்துவ முகாம் நடந்தது.
அடிப்படை மருத்துவ பரிசோதனைகள், நிபுணர் ஆலோசனைகள், எலும்பு அடர்த்தி சோதனைகள், பல் பரிசோதனை, டிரினிட்டி கண் பரிசோதனையுடன் இணைந்து, கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் முஜிபுர் ரஹ்மான் கூறுகையில், '' செழிப்பான சமூகத்தை உருவாக்குவதற்கு, பெண்களின் ஆரோக்கியம் முக்கியம்,'' என்றார்.
மருத்துவமனையின் தலைமை எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சதிஷ் குமார் மற்றும் பல்துறை சிறப்பு நிபுணர்கள், டாக்டர்கள் பங்கேற்ற இம்முகாமில் நுாறுக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்தனர்.