/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.ஐ.டி., கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
கே.ஐ.டி., கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஆக 04, 2024 11:02 PM

கோவை : கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் சென்னை அறம் ஐ.ஏ.எஸ்., அகாடமி நிறுவனத்திற்கும் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு நடந்தது.
கல்லுாரி மாணவர்களை தனியார் வேலைவாய்ப்புகளுக்கு மட்டுமின்றி, அரசு போட்டித்தேர்வுகளுக்கும் தயார்படுத்தும் வகையில், இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது. மாணவர்களுக்கு பொது அறிவு கேள்விகள் கேட்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
இதில், எம்.பி., ராஜ்குமார், கல்லுாரி நிறுவனத்தலைவர் பழனிசாமி, துணைத்தலைவர் பைந்தமிழ் பாரி, இந்திய வருவாய் சேவை அதிகாரி பிரபாகரன், சி.இ.ஓ., இந்து முருகேசன், முதல்வர் மோகன்தாஸ் காந்தி, அறம் ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குனர் செந்தில்குமார், வழிகாட்டி முத்துக்குமார் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.