ADDED : மே 27, 2024 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மறைந்த முன்னால் பிரதமர் நேருவின், 60வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. பொள்ளாச்சியிலுள்ள, கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம், காமராஜ் பவனில், நேருவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்ட தலைவர் பகவதி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், நகரத் தலைவர் செந்தில்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதிமணி, மாவட்ட நிர்வாகிகள் ஜெகதீசன், பிரகாஷ், மோகன்ராஜ், கனகராஜ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். நாட்டுக்காக நேரு கொண்டு வந்த திட்டங்கள், அன்றைய ஆட்சியின் சிறப்பம்சங்கள் குறித்து நிர்வாகிகள் பேசினர்.
இதேபோன்று, காங்., கட்சி சார்பில் பல்வேறு இடங்களில், நேருவின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.