sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'மெமு' ரயில் இன்று 4 டிரிப் ஓடாது! தெற்கு ரயில்வே அறிவிப்பு

/

'மெமு' ரயில் இன்று 4 டிரிப் ஓடாது! தெற்கு ரயில்வே அறிவிப்பு

'மெமு' ரயில் இன்று 4 டிரிப் ஓடாது! தெற்கு ரயில்வே அறிவிப்பு

'மெமு' ரயில் இன்று 4 டிரிப் ஓடாது! தெற்கு ரயில்வே அறிவிப்பு


ADDED : ஜூலை 23, 2024 09:03 PM

Google News

ADDED : ஜூலை 23, 2024 09:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:

* போத்தனுாரில் இருந்து காலை, 9:40 மணிக்கு மேட்டுப்பாளையத்துக்கு புறப்படும் 'மெமு' ரயில் (எண்: 06812) மற்றும் மதியம், 1:05க்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து போத்தனுாருக்கு புறப்படும் ரயில் (எண்: 06815); மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை, 10:55க்கு புறப்பட்டு கோவை சந்திப்பு வரும் ரயில் (எண்: 06813); இதேபோல், காலை, 11:50 மணிக்கு கோவை சந்திப்பில் இருந்து மேட்டுப்பாளையம் புறப்படும் 'மெமு' ரயில் இன்று (24ம் தேதி) ஒரு நாள் மட்டும் ஓடாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

* கோவை வழியாகச் செல்லும் ஆழப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் (எண்: 13352), இன்றும் (24ம் தேதி), 28ம் தேதியும், போத்தனுார் வழியாக இருகூர் சென்றடையும்; கோவை சந்திப்புக்கு வராது. இதேபோல், எர்ணாகுளம் - பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் (எண்: 12678) மேற்கண்ட இரு நாட்களும் போத்தனுார் வழியாகச் செல்லும்.

* சென்னை எக்மோர் - மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (எண்: 16159) இருகூர் வழியாக போத்தனுார் சென்றடையும். பீளமேடு, வடகோவை மற்றும் கோவை சந்திப்புக்கு, 24 மற்றும், 28ம் தேதி வராது.

* பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (எண்: 22644) இருகூர் வழியாக போத்தனுார் செல்லும். புதுடில்லி - திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் (எண்: 12626) இருகூர் வழியாக போத்தனுார் செல்லும். இதேபோல், மொத்தம் ஆறு ரயில்கள், கோவை சந்திப்புக்கு வராமல் இருகூர் வழியாக போத்தனுார் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* காலை, 7:50 மணிக்கு ஈரோட்டில் இருந்து கோவை வரும் ரயில் (எண்: 06801), 24, 28ம் தேதிகளில் இருகூர் வரை மட்டுமே இயக்கப்படும்; இருகூரில் இருந்து கோவை சந்திப்புக்கு வராது.

இதேபோல், மேட்டுப்பாளையத்தில் இருந்து போத்தனுாருக்கு காலை, 8:20 மணிக்கு புறப்படும் மெமு ரயில், 28ம் தேதி மட்டும் வடகோவையில் நிறுத்தப்படும்.

அன்றைய தினம் காலை, 9:40க்கு போத்தனுாரில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு புறப்படும் மெமு ரயில், வடகோவையில் இருந்து காலை, 10:02க்கு புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.






      Dinamalar
      Follow us