/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகரில் அச்சுறுத்தும் ஆளிறங்கு குழிகள்
/
நகரில் அச்சுறுத்தும் ஆளிறங்கு குழிகள்
ADDED : டிச 09, 2024 07:47 AM
உடுமலை : உடுமலை நகரில், பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டுக்கு வந்து பல ஆண்டுகளாகியும், பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளது.
குறிப்பாக, நகரின் முக்கிய வீதிகளில், பாதாள சாக்கடை ஆளிறங்கு குழி மூடிகள், சேதமடைந்தாலும், அவற்றை உடனடியாக சீரமைப்பதில்லை. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சர்தார் வீதி எக்ஸ்டென்சன், ராஜேந்திரா ரோடு, கழுத்தறுத்தான் பள்ளம் பாலம் உட்பட பல்வேறு இடங்களில், ரோட்டின் மையப்பகுதியிலுள்ள, ஆளிறங்கு குழி மூடிகள் சேதமடைந்து, பரிதாப நிலையில் உள்ளது.
மழைக்காலத்தில் ரோட்டில், வெள்ளம் செல்லும் போது, ரோட்டில் சேதமடைந்த பாதாள சாக்கடை மூடிகள் இருப்பது தெரியாமல், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
பெரிய விபத்து ஏற்படும் முன், சீரமைப்பு பணிகளை நகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும்.