/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜி.கே.என்.எம்.,ல் மெனோபாஸ் கிளினிக்
/
ஜி.கே.என்.எம்.,ல் மெனோபாஸ் கிளினிக்
ADDED : ஆக 11, 2024 10:29 PM

கோவை:மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் பிரச்னைகளுக்கு சிகிச்சையின் மூலமாக தீர்வளிக்கும் நோக்கில், ஜி.கே.என்.எம். மருத்துவமனையில், மெனோபாஸ் கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைமுறை மாற்றங்கள், உடற்பயிற்சி, ஹார்மோன் சிகிச்சை பற்றிய ஆலோசனைகள் இந்த கிளினிக்கில் வழங்கப்படுகின்றன. ஹார்மோன் ஆய்வுகள் மற்றும் வருடாந்திர மருத்துவ சோதனைகளும் செய்யப்படுகின்றன. இவை பெண்களுக்கு ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ உதவுகின்றன.
கிளினிக் திறப்பு விழாவில், மதுரை மெனோபாஸ் சொசைட்டியின் தலைவர் டாக்டர் சுமதி, ஜி.கே.என்.எம்., மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி, மருத்துவ செயல் இயக்குனர் டாக்டர் சந்தோஷ் குமார் டோரா பங்கேற்றனர். டாக்டர்கள் அமுதா, ராதா, லதா, மாதவி, சித்ராமணி, நித்யா, பவித்ரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.