ADDED : மே 17, 2024 11:02 PM
அ நிறம் | அளவு
நெகமம்;
நெகமம், ஜக்கார்பாளையத்தில் தேங்காய் வியாபாரி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூரை சேர்ந்தவர் பாலமுருகன், 33, தேங்காய் வியாபாரி. இவர், நெகமம், ஜக்கார்பாளையத்தில் தங்கி தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். இதில், அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது.
மேலும், கடன் தொல்லை அதிகம் இருந்ததால், மனம் உடைந்த பாலமுருகன் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து, நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
