/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையத்தில் ஐ.ஜி., ஆய்வு
/
மேட்டுப்பாளையத்தில் ஐ.ஜி., ஆய்வு
ADDED : செப் 04, 2024 12:47 AM

மேட்டுப்பாளையம்;விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலை கரைப்பு மற்றும் ஊர்வலம் நடக்கும் பகுதிகளில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், மேட்டுப்பாளையத்தில் நேற்று ஆய்வு கொண்டார்.
மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, ஹிந்து முன்னணி சார்பில் 60க்கும் மேற்பட்ட இடங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், 15க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட, போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பவானி ஆற்றில் கரைக்கப்படும். மேட்டுப்பாளையத்தில் இதுதொடர்பாக ஊர்வலம் நடக்கவுள்ள கோவை - மேட்டுப்பாளையம் சாலை, மேட்டுப்பாளையம் - - ஊட்டி சாலை மற்றும் சிலை கரைக்கப்படும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே உள்ள பவானி ஆறு உள்ளிட்ட பகுதிகளில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார் நேற்று ஆய்வு கொண்டார்.