/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எண்ணெய் வித்து பயிர்களில் நுண்ணீர் பாசனம்!
/
எண்ணெய் வித்து பயிர்களில் நுண்ணீர் பாசனம்!
ADDED : ஆக 09, 2024 12:39 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், எண்ணெய் வித்து பயிர்களில் நுண்ணீர் பாசனம் குறித்து பயிற்சி முகாம் நடந்தது.
பொள்ளாச்சி தெற்கு வேளாண் துறை சார்பில், வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், எண்ணெய் வித்து பயிர்களில் நுண்ணீர் பாசனம் மற்றும் பயறு வகைகளில் பொட்டாசியம் குளோரைடு பயன்பாடு குறித்து பயிற்சி முகாம், சிஞ்சுவாடியில் நடந்தது. வேளாண் அலுவலர் துளசிமணி தலைமை வகித்தார்.
வாணவராயர் வேளாண் கல்லுாரி பேராசிரியர் சரவணக்குமார், பயிறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்கள், நுண்ணீர் பாசனம் மற்றும் பயிர்களில் பொட்டாசியம் குளோரைடு பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.
தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வசுமதி, தோட்டக்கலைத்துறை திட்டங்கள், தென்னையில் கேரளா வாடல் நோய் குறித்தும் விளக்கியதுடன், பழச்செடிகள், கொத்தமல்லி விதைகள் மானியத்தில் கிடைக்கும் என விளக்கமளித்தார்.
வேளாண் உதவி அலுவலர் குமார், வேளாண் வணிக மற்றும் விற்பனை துறை திட்டங்கள் மற்றும் 'இ - நாம்' குறித்தும், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க டி.என்.எம்.பி., மற்றும் பி.எம்.எப்.இ.எம்., திட்டத்தின் கீழ், 40 சதவீத மானியம் பெற்றுத்தரப்படும் என விளக்கினார்.
உழவர் சந்தை வாயிலாக நேரடியாக விற்பனை செய்ய, உழவர் சந்தை அட்டை பெற்றுக்கொள்ள வலியுறுத்தப்பட்டது. வேளாண் உதவி அலுவலர் கந்தசாமி, வேளாண் துறையின் திட்டங்கள், பிரதமரின் பசல் பீமா யோஜான திட்டம், சோளம், மக்காச்சோளம், உளுந்து ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு குறித்து விளக்கினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் ராதா, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.