/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறுமைய 'செஸ்' விளையாட்டு: 200 மாணவ, மாணவியர் 'களம்'
/
குறுமைய 'செஸ்' விளையாட்டு: 200 மாணவ, மாணவியர் 'களம்'
குறுமைய 'செஸ்' விளையாட்டு: 200 மாணவ, மாணவியர் 'களம்'
குறுமைய 'செஸ்' விளையாட்டு: 200 மாணவ, மாணவியர் 'களம்'
ADDED : செப் 05, 2024 12:17 AM
கோவை : எஸ்.எஸ்.குளம் அன்னுார் குறுமைய செஸ் போட்டியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
பள்ளி கல்வித்துறை சார்பில், எஸ்.எஸ்.குளம் அன்னுார் குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகளை, ரூபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒருங்கிணைந்து நடத்தி வருகிறது.
செஸ் விளையாட்டு போட்டியில், 33 பள்ளிகளை சேர்ந்த, 11, 14, 17, 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சிறப்பாக விளையாடினர்.
போட்டியை, ரூபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் சுகுமார், முதல்வர் கற்பகஜோதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
11, 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், கே.வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சத்ரேஷ், பரணிகா, சரவணி, அப்துல் வாஹித், ரூபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சோனாக்க்ஷி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இதில், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், ஆதித்யா பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஸ்ரீ சாய்சரண், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் விமல் ஜோதி பள்ளி மாணவி ஜனனி பிரியா, கே.வி., மெட்ரிக் பள்ளி தருண் ஆகாஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களை, பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.