ADDED : ஆக 02, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்:
கவுண்டம்பாளையம் அருகே மினி லாரி திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கவுண்டம்பாளையம் அருகே உள்ள கண்ணப்ப நகரை சேர்ந்தவர் சண்முகம், 56; ஸ்டீல் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவருடைய கடை முன் மினி லாரியை கடை முன் நிறுத்தி விட்டு வெளியே சென்றார்.
திரும்பி வந்து பார்க்கும்போது, வாகனம் காணவில்லை. இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார் மினி லாரியை திருடிய நபர் மதுக்கரை, காந்திநகரை சேர்ந்த அருண்குமார், 30, என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, மினி லாரியை கைப்பற்றினர்.