/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் இருந்து புறப்பட்டு சென்றார் அமைச்சர் அமித்ஷா
/
கோவையில் இருந்து புறப்பட்டு சென்றார் அமைச்சர் அமித்ஷா
கோவையில் இருந்து புறப்பட்டு சென்றார் அமைச்சர் அமித்ஷா
கோவையில் இருந்து புறப்பட்டு சென்றார் அமைச்சர் அமித்ஷா
ADDED : பிப் 27, 2025 11:51 PM

கோவை: ஈஷா மஹா சிவராத்திரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று கோவையில் இருந்து விமானத்தில் உ.பி., சென்றார்.
ஈஷா சார்பில் நடந்த மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த, 25ம் தேதி இரவு, 8:40 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் கோவை வந்தார். தொடர்ந்து, பீளமேடு பகுதியில் பா.ஜ., அலுவலகத்தை திறந்து வைத்தார். கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பின்னர், நேற்று முன்தினம் இரவு ஈஷா மஹாசிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்து நேற்று காலை ஈஷா மையத்தில் இருந்து புறப்பட்டு விமானப்படை ஹெலிகாப்டரில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர், அங்கிருந்து ராணுவ விமானத்தில் புறப்பட்டு உ.பி.,க்கு சென்றார்.