/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மேலாண் திறனே சிறந்த நிர்வாகத்துக்கு வழி' அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு
/
'மேலாண் திறனே சிறந்த நிர்வாகத்துக்கு வழி' அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு
'மேலாண் திறனே சிறந்த நிர்வாகத்துக்கு வழி' அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு
'மேலாண் திறனே சிறந்த நிர்வாகத்துக்கு வழி' அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு
ADDED : செப் 06, 2024 03:09 AM

கோவை:''மேலாண் திறனை கற்றுத்தேர்ந்தால், சிறந்த நிர்வாகத்தை மேற்கொள்ள முடியும்,'' என, மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.பி.எஸ்.ஜி., மேலாண்மைக் கல்லுாரி நிறுவன தின விழா நேற்று பி.எஸ்.ஜி., மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.
மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:ஆசிரியர்கள் தான் மாணவர்களை மட்டுமல்ல நிர்வாகத்தையும் நல்ல முறையில் நடத்த உதவுகின்றனர். மேலாண்மை என்பது ஒவ்வொரு நிறுவனத்துக்கும் முக்கியமான ஒன்று. அதை கற்றுத் தேர்ந்து விட்டால், சிறந்த நிர்வாகத்தை மேற்கொள்ள முடியும். அரசியலில் நுழைந்த போது சிறந்த மேலாண்மை இருந்ததால், தகவல் தொழில்நுட்ப துறை தலைவராக நியமிக்கப்பட்டேன். அப்போது மேலாண்மை யுக்திகளை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற உதவ முடிந்தது. அதேபோல், நிதி துறை அமைச்சராக இருந்த போது திறம்பட செயல்பட உதவியது. நமது முதல்வர் என்னை நம்பி பொறுப்புகளை ஒப்படைத்தார். சிறந்த மேலாண்மை திறன் இருந்ததால், நிதி நெருக்கடியை சமாளிக்க முடிந்தது. மேலாண் திறன் ஒவ்வொருவரிடத்திலும் உள்ளது.
அதை பயன்படுத்துவது அவரவர் திறமை.இவ்வாறு, அவர் பேசினார்.முன்னதாக பி.எஸ்.ஜி., மேலாண்மை கல்லுாரி இயக்குனர் ஸ்ரீவித்யா வரவேற்றார். பி.எஸ்.ஜி., அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.விழாவில், கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள், புளோரிடா சர்வதேச பல்கலை, நிதித்துறை பேராசிரியர் கிருஷ்ணன் தண்டபாணி, இ-கேப்ஸ் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர், குணசேகரன், தென்மேற்கு ரயில்வே துணை நிதி ஆலோசகர் ஜெயபாலாஜி, இன்மொபி நிறுவன துணைத்தலைவர் வீணா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. விழாவில், பி.எஸ்.ஜி., அண்ட் சன்ஸ் அறக்கட்டளை தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.