/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளையாட்டு மேம்பாட்டிற்கு திட்டங்கள் அமைச்சர் தகவல்
/
விளையாட்டு மேம்பாட்டிற்கு திட்டங்கள் அமைச்சர் தகவல்
விளையாட்டு மேம்பாட்டிற்கு திட்டங்கள் அமைச்சர் தகவல்
விளையாட்டு மேம்பாட்டிற்கு திட்டங்கள் அமைச்சர் தகவல்
ADDED : ஆக 12, 2024 01:42 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் நடந்த அகில இந்திய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் மாணவர்கள், ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் சங்கம், கோவை மாவட்ட ஸ்கேட்டிங் சங்கம் சார்பில், இரண்டாம் ஆண்டு 'இந்தியா ஸ்கேட்' தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் கோவை மற்றும் பொள்ளாச்சியில் நடந்தது.
கடந்த 7ம் தேதி துவங்கிய இப்போட்டியில், 22 மாநிலங்களைச்சேர்ந்த 2,165 வீரர், வீராங்கனையர் கலந்து கொண்டனர். போட்டியானது, ஸ்பீடு, ஆர்டிஸ்டிக், ரோலர் ஹாக்கி, இன்லைன் ஹாக்கி, இன்லைன் பிரீஸ்டைல், ஆல்பைன், டவுன்ஹில், ரோலர் டெர்பி, ரோலர் பிரீஸ்டைல், ஸ்கேட் போர்டிங், ஸ்கூட்டர் என, 11 பிரிவுகளில் நடத்தப்பட்டது.
அதில், ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி, பொள்ளாச்சி சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் கோர்ட்டில் நடந்த நிலையில், மாணவ, மாணவியர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், ''விளையாட்டு வீரர், வீராங்கனையரை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், ஒவ்வொரு விளையாட்டிலும் பயிற்சி மேற்கொள்ளும் வகையில், அதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டும் வருகின்றன,'' என்றார்.
உடன், எம்.பி.,க்கள் கணபதிராஜ், ஈஸ்வரசாமி, சக்தி நிறுவனங்களின் குழுமத் தலைவர் மாணிக்கம், கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் கணேசன், மாவட்ட ஸ்கேட்டிங் சங்கச் செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

