/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வர்த்தக கண்காட்சி அமைச்சர்கள் பங்கேற்பு
/
வர்த்தக கண்காட்சி அமைச்சர்கள் பங்கேற்பு
ADDED : மே 27, 2024 11:58 PM

பொள்ளாச்சி:தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், இளம் தொழில் முனைவோர் அமைப்பின் சார்பில், வர்த்தக கண்காட்சி, பொள்ளாச்சி சர்க்கஸ் மைதானத்தில் கடந்த, 26ம் தேதி துவங்கியது. கண்காட்சியை, வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்ரமணியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
நிறைவு விழாவுக்கு, தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமை வகித்தார். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அரசின் சார்பில் வணிகர்களுக்கு அளிக்கப்படும் நலத்திட்டம் குறித்து பேசினார். அமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இளம் பாடகர்கள் பிரியங்கா, நிவாஸ், ரேஷ்மா, பிரியா, கார்த்திக் தேவராஜ் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அமைப்பின் தலைவர் ஆனந்த், ஒருங்கிணைப்பாளர் அலெக்சாண்டர், செயலாளர் சுந்தரபாண்டியன் செய்திருந்தனர்.