/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் 'தகவல் இல்லை' மலுப்பல் பதிலால் அமைச்சு பணியாளர் வேதனை
/
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் 'தகவல் இல்லை' மலுப்பல் பதிலால் அமைச்சு பணியாளர் வேதனை
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் 'தகவல் இல்லை' மலுப்பல் பதிலால் அமைச்சு பணியாளர் வேதனை
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் 'தகவல் இல்லை' மலுப்பல் பதிலால் அமைச்சு பணியாளர் வேதனை
ADDED : ஆக 25, 2024 10:07 PM
கோவை:விதிகளுக்கு புறம்பான பணி நியமனம் குறித்த கேள்விக்கு 'தகவல் இல்லை' என்ற ஆர்.டி.ஐ., பதிலால் மனமுடைந்துள்ள மாநகராட்சி அமைச்சு பணியாளர்கள், 'எத்தனை நாள்தான் போராடுவது' என்ற கேள்வியை முன்வைக்கின்றனர்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு புதிய விதிகள் கடந்த, 2023ம் ஆண்டு ஏப்., 13 முதல் அமல்படுத்தப்பட்டன. வருவாய் துறையில் துணை கலெக்டராக இருப்பவர்களை மாநகராட்சியில் பணி நியமனம் செய்யலாம் என்ற நடைமுறை, 1996ம் ஆண்டு மாநகராட்சி பணி விதிகளில் இருந்தது.
புதிய விதிகளின்படி இதில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இருந்தும் விதிமீறி, கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் உதவி கமிஷனர் பணியிடங்களுக்கு, வருவாய் துறை, துணை கலெக்டர்களை அரசாணை வாயிலாக நியமிப்பதாக குமுறல்கள் எழுகின்றன.
இதுகுறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்(ஆர்.டி.ஐ.,) கேட்கப்பட்ட கேள்விக்கு, 'தகவல் இல்லை' என்று பதில் அனுப்பப்பட்டுள்ளது.
பழைய விதிகள் முடிவுக்கு வந்தும், விதிகளுக்கு புறம்பாக வருவாய் துறை பணி நியமனம் செய்வதன் பின்னணியில், லஞ்சம் விளையாடுவதாக, மாநகராட்சி பணியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சு பணியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:
வருவாய்த் துறையில் உள்ள துணை கலெக்டர்களை, உரிய அங்கீகாரம் பெற்ற நகராட்சி நிர்வாக முதன்மை செயலர் அல்லது நிர்வாக இயக்குனர் உத்தரவு இல்லாமல், எந்த அதிகாரத்தின் கீழ், மாநகராட்சியில் உதவி கமிஷனராக பதவியேற்க அனுமதிக்கப்பட்டார் என்று, ஆர்.டி.ஐ.,யில் கேள்வி கேட்டோம்.
அதற்கு, 'தகவல் இல்லை' என்று, திருநெல்வேலி மாநகராட்சி பொது தகவல் அலுவலர் பதில் அனுப்பி உள்ளார். துணை கலெக்டரை திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனர் பதவியில் சேர அனுமதித்து, திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனர், உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கான, உத்தரவு நகல் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலருக்கும், நகராட்சி நிர்வாக இயக்குனருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இருந்த போதும், இந்த விதிகளுக்கு புறம்பான நியமனங்கள் மீது, இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிகாரிகளும் தப்பித்துக்கொள்ளவே பார்க்கின்றனர். இதனால், மாநகராட்சியில் பதவி உயர்வுக்கு நேர்மையான முறையில் காத்திருப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். அடுத்தகட்டமாக, நகராட்சி நிர்வாக இயக்குனர், முதன்மை செயலரிடம் முறையிட உள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

