/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காணாமல் போன வாலிபர் கிணற்றில் சடலமாக மீட்பு
/
காணாமல் போன வாலிபர் கிணற்றில் சடலமாக மீட்பு
ADDED : செப் 01, 2024 02:11 AM

தொண்டாமுத்துார்;பூலுவபட்டியில், காணாமல் போன வாலிபர், மூன்று நாட்களுக்குப்பின் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆலாந்துறை அடுத்த வெள்ளிமேடு கலைஞர் நகரை சேர்ந்தவர் பரணிதரன்,24. இவருக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவர் பூலுவபட்டி பேரூராட்சியில், தற்காலிக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததை கொண்டாட, தன்னுடன் பணிபுரியும் முருகன், கார்த்திக் ஆகியோருடன் பூலுவபட்டியில் உள்ள டாஸ்மாக் மது பாருக்கு சென்று மது அருந்தியுள்ளனர்.
அப்போது, மதுபோதையில் முருகன், பாரில் வேலை செய்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பார் ஊழியர்கள், முருகனை தாக்கியுள்ளனர். இதைக்கண்ட பரணிதரன் பாரை விட்டு வெளியேறினார்.
மறுநாள் காலை வரை பரணிதரன் வீட்டுக்கு வராததால், அவரது தந்தை அளித்த புகாரின்படி, ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
நேற்று காலை, பூலுவபட்டியில், ரத்தினசாமி என்பவரின் தோட்டத்தில், பாழடைந்த கிணற்றில் சடலம் மிதப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொண்டாமுத்துார் தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்டனர். அது, பரணிதரன் என்பது தெரிந்தது.
மது பார் ஊழியர்களிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.