ADDED : மே 19, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
சூலூர்: சூலூரில் எம்.எல்.ஏ., அலுவலகம் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்ததை ஒட்டி, தொகுதிகளில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. புதிய அரசு பதவி ஏற்றுள்ள நிலையில், எம்.எல்.ஏ., அலுவலகங்கள் திறக்கப்பட்டன.
சூலூர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள எம்.எல்.ஏ.,அலுவலகம் திறக்கப்பட்டு, புதுப்பிக்கும் பணியை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
அலுவலகம் முழுக்க சுத்தம் செய்யப்பட்டு, வெள்ளை அடிக்கும் பணி துவங்கியுள்ளது. தாழ்வாக வளர்ந்து இருந்த மரக்கிளை வெட்டி அகற்றப்பட்டது. ஓரிரு நாட்களில் பணிகள் முடிந்தவுடன், புதிதாக தேர்வு செய்யப்பட்ட த.வெ.க., எம்.எல்.ஏ., சுகுமார் அங்கு பணிகளை துவங்குவார் என, எதிர்பார்க்கப் படுகிறது.
