/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருச்செந்துாருக்கு சிறப்பு ரயில் இயக்க எம்.எல்.ஏ., கோரிக்கை
/
திருச்செந்துாருக்கு சிறப்பு ரயில் இயக்க எம்.எல்.ஏ., கோரிக்கை
திருச்செந்துாருக்கு சிறப்பு ரயில் இயக்க எம்.எல்.ஏ., கோரிக்கை
திருச்செந்துாருக்கு சிறப்பு ரயில் இயக்க எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : மே 19, 2024 11:05 PM
பொள்ளாச்சி;'வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்துாருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும்,' என, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
பொள்ளாச்சி எம்.எல்.ஏ., அனுப்பியுள்ள மனு:
வைகாசி விசாகத்தையொட்டி, கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக வரும், 25ம் தேதி வரை தினமும் ரயில் இயக்க வேண்டும்.
மயிலாடுதுறையில் இருந்து நேரடியாக திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக கோவை வரை இயக்க வேண்டும்.
இதன் வாயிலாக, பொள்ளாச்சி பகுதி பொதுமக்கள், ஆன்மிக சுற்றுலாதளங்களுக்கு சிரமமின்றி எளிதாக செல்ல முடியும். எனவே, பொள்ளாச்சி பொதுமக்களின் நலன் கருதி ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.