/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மொபைல்போன் திருட்டு வழக்கு; கோவையை சேர்ந்த இருவர் கைது
/
மொபைல்போன் திருட்டு வழக்கு; கோவையை சேர்ந்த இருவர் கைது
மொபைல்போன் திருட்டு வழக்கு; கோவையை சேர்ந்த இருவர் கைது
மொபைல்போன் திருட்டு வழக்கு; கோவையை சேர்ந்த இருவர் கைது
ADDED : செப் 05, 2024 06:58 AM

பாலக்காடு : பாலக்காடு அருகே, பார்க்கிங் செய்திருந்த காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து, மொபைல்போன் மற்றும் பணத்தை திருடிய வழக்கில், கோவையை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு சந்திரநகர் அருகே உள்ள ஹோட்டல் முன்பாக, கடந்த ஆக., 23ம் தேதி இரவு பார்க்கிங் செய்திருந்த கார் ஜன்னல் கண்ணாடியை உடைத்து, விலை உயர்ந்த மூன்று மொபைல்போன்கள் மற்றும் 25 ஆயிரம் ரூபாயை மர்மகும்பல் திருடியது.
சம்பவம் தொடர்பாக, பாலக்காடு புதுச்சேரி (கசபா) போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இன்ஸ்பெக்டர் விஜயராஜன் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது, கோவை மாவட்டம் மதுக்கரை அறிவொளி நகரைச் சேர்ந்த கார்த்திக், 24, தமிழ்வனம், 27, ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை நேற்று கோவையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
இன்ஸ்பெக்டர் விஜயராஜன் கூறுகையில், ''பாலக்காடு பகுதியில் திருட திட்டமிட்டு கோவையிலிருந்து வந்த இவர்கள், பார்க்கிங் செய்திருந்த காரின் ஜன்னல் கண்ணாடியை தூரத்திலிருந்து கவண் பயன்படுத்தி உடைத்து திருடியுள்ளனர். திருட்டுக்கு இவர்கள் பயன்படுத்திய ஸ்கூட்டரை பறிமுதல் செய்து உள்ளோம். இவர்கள் மீது, வேறு ஏதாவது வழக்குகள் உள்ளதா என்பது குறித்து விசாரிக்கிறோம்,'' என்றார்.