தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மொபைல் ரேஷன் கடை துவங்கணும்; எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை

மொபைல் ரேஷன் கடை துவங்கணும்; எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை

மொபைல் ரேஷன் கடை துவங்கணும்; எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை


ADDED : ஜூலை 17, 2024 08:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2024 08:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை : யானையிடம் இருந்து ரேஷன் பொருட்களை பாதுகாக்க, மொபைல் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை தாலுகாவில் மொத்தம், 16,700 ரேஷன் கார்டுகள் உள்ளன. மொத்தம் உள்ள, 21 வார்டுகளில் 47 ரேஷன்கடைகள் வாயிலாக, மாதம் தோறும் பொதுவினியோக திட்டத்தில் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

தமிழக - கேரள எல்லையில் வால்பாறை அமைந்துள்ளது. பருவமழைக்கு பின் வன வளம் பசுமையாக காணப்படுவதால், கேரளாவில் இருந்தது மளுக்கப்பாறை வழியாக, வால்பாறையில் உள்ள எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிடுகிறது.

பகல் நேரத்தில் தேயிலை காட்டில் முகாமிடும் யானைகள், இரவு நேரத்தில் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, வீடு மற்றும் கடைகளை சேதப்படுத்தி வருகிறது.

குறிப்பாக, தொழிலாளர் குடியிருப்பு பகுதியை ஒட்டி அமைந்துள்ள ரேஷன்கடைகளை யானைகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பொருட்கள் சேதமடைவதோடு, மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க முடியாத நிலை நீடிக்கிறது.

இதனால், யானைகள் நடமாடும் பகுதியில் மாதத்தில் ஒரு நாள் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஒரே நாளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதால், தொழிலாளர்கள் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் தவியாய் தவிக்கின்றனர்.

எஸ்டேட் தொழிலாளர்கள் கூறுகையில், 'வால்பாறை தாலுகாவில் யானைகள் நடமாடும் எஸ்டேட் பகுதியில், மொபைல்ரேஷன் கடை அமைக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாள் வீதம் மாதத்தில் நான்கு நாட்களாவது, எஸ்டேட் பகுதியில் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும்,' என்றனர்.

எதிர்பார்ப்பு!


வால்பாறை தாலுகாவில், காடம்பாறை, கருமுட்டி, வெள்ளிமுடி, கீழ்பூனாஞ்சி, கவர்க்கல், கல்லார், சங்கரன்குடி, உடுமன்பாறை, பாலகணாறு, வில்லோனி நெடுங்குன்று உள்ளிட்ட, 13 செட்டில்மென்ட்கள் உள்ளன. இங்கு, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.

இவர்கள், மாதம் தோறும் ரேஷன் பொருட்கள் வாங்க பல கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டி நிலை உள்ளது. எனவே, வால்பாறை தாலுகாவில் உள்ள, 13 செட்டில்மென்ட் பகுதிகளுக்கும், மொபைல் ரேஷன் கடை வாயிலாக அத்தியாவசிய பொருட்கள் நேரடியாக வழங்க, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பழங்குடியின மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us