/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்னணு இயந்திரங்களில் மாதிரி ஓட்டுப்பதிவு
/
மின்னணு இயந்திரங்களில் மாதிரி ஓட்டுப்பதிவு
ADDED : ஏப் 13, 2024 12:16 AM

சூலூர்;தேர்தலில் பயன்படுத்தப்படும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் மாதிரி ஓட்டுப்பதிவு செய்யும் பணி சூலூரில் நடந்தது.
வரும் லோக்சபா தேர்தலில், சூலூர் தொகுதியில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பேலட் சீட் பொருத்தும் பணி இரு நாட்களாக நடந்தது.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இளவரசி தலைமையில், இயந்திரங்கள் முறையாக இயங்குகிறதா, சின்னம் சரியாக பதிவாகிறதா என, சாரி பார்க்க, மாதிரி ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது.
தாசில்தார் தனசேகர், துணை தாசில்தார்கள் செந்தில், சேகர், மணிகண்டன் உள்ளிட்டோர், 20 க்கும் மேற்ப்பட்ட இயந்திரங்களில் மாதிரி ஓட்டுப்பதிவு செய்து சரி பார்த்தனர்.
அதில் பதிவான ஓட்டுகளை அழித்த பின், அந்த இயந்திரங்களுக்கு சீல் வைத்து, அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைத்து, ஸ்டிராங் ரூமில் வைத்தனர்.

