/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மிதமான மழை பெய்யும் காலநிலை மையம் தகவல்
/
மிதமான மழை பெய்யும் காலநிலை மையம் தகவல்
ADDED : மார் 14, 2025 10:36 PM
பொள்ளாச்சி; கோவை மாவட்டத்தில் நாளை வரை லேசானது முதல், மிதமானமழை பெய்ய வாய்ப்பு உள்ளது, என, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி அறிக்கை:
கோவை மாவட்டத்தில், நாளை,16ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. தென்னையில், ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதல் தென்படுகிறது. மஞ்சள் நிற ஒட்டுப் பொறியில் விளக்கெண்ணை தடவி, எக்டருக்கு 20 தாள்கள் வைக்கவும்.
ஒட்டுண்ணி இரை விழுங்கிகளை, தென்னை ஓலையில், ஸ்டேப்ளர் பயன்படுத்தி கட்டிவிடவும்.வேர்வாடல் நோய்க்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
மின்கம்பங்கள் மற்றும் மரங்களுக்கு அடியில் கால்நடைகளைமேய்ச்சலுக்குகட்ட வேண்டாம். மழைக்கால நோய்களில் இருந்து கால்நடைகளைப் பாதுகாக்க, உள்ளூர் கால்நடை மருத்துவர்களை கலந்து ஆலோசிக்கவும். பருவ கால நோய்களுக்கு எதிராக, தடுப்பூசி போடவும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.