/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொங்குநாடு மருத்துவமனையில் நவீன இருதய அறுவை சிகிச்சை
/
கொங்குநாடு மருத்துவமனையில் நவீன இருதய அறுவை சிகிச்சை
கொங்குநாடு மருத்துவமனையில் நவீன இருதய அறுவை சிகிச்சை
கொங்குநாடு மருத்துவமனையில் நவீன இருதய அறுவை சிகிச்சை
ADDED : ஆக 14, 2024 08:48 PM
கோவையின் மையப் பகுதியான டாடாபாத்தில், பவர் ஹவுஸ்க்கு எதிரில், 375 படுக்கையுடன் எல்லா விதமான பரிசோதனை வசதிகளுடன், கொங்குநாடு மருத்துவமனை அமைந்துள்ளது.
அனைத்து விதமான நோய்களுக்கும், அனுபவமிக்க டாக்டர்களை கொண்டு, ஆண்டு முழுவதும் சலுகை கட்டணத்தில் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. முதலமைச்சர் மற்றும் பிரதமர் காப்பீட்டு திட்டங்களின் கீழ், கேன்சர் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
நவீன உபகரணங்களுடன் கூடிய இருதய அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு நவீன இதய அறுவை சிகிச்சை ஆபரேஷன் தியேட்டர்கள் உள்ளன.
10 ஆயிரம் இருதய அறுவை சிகிச்சைகளை, வெற்றிகரமாக செய்து முடித்துள்ள டாக்டர் மோகனகிருஷ்ணன் தலைமையில், இருதய அறுவை சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. டாக்டர் நரேஷ்குமார் தலைமையில், இருதய அறுவை சிகிச்சை மயக்கவியல் துறை செயல்படுகிறது.