/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நவீனமயமான குழந்தைகள் வார்டு; சிகிச்சைக்கு வருவோர் அதிகரிப்பு
/
நவீனமயமான குழந்தைகள் வார்டு; சிகிச்சைக்கு வருவோர் அதிகரிப்பு
நவீனமயமான குழந்தைகள் வார்டு; சிகிச்சைக்கு வருவோர் அதிகரிப்பு
நவீனமயமான குழந்தைகள் வார்டு; சிகிச்சைக்கு வருவோர் அதிகரிப்பு
ADDED : ஜூலை 25, 2024 10:38 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனையில், குழந்தைகள் சிகிச்சைக்காக, புறநோயாளிகள், உள்நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் என, மூன்று பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு, முஸ்கான் திட்டத்தில், வார்டுகள் அனைத்தும் நவீன மயமாக்கப்பட்டுள்ளன. சிகிச்சை பெறும் போது, குழந்தைகள் அச்சப்படாமல் இருக்க, வார்டில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகளை கவரும் வகையில் இருக்கைகள், குடிநீர் வசதிகள், பூந்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகள் நல தலைமை மருத்துவர் செல்வராஜ் கூறியதாவது: முஸ்கான் திட்டத்தில், குழந்தைகள் வார்டு நவீனமயமாக்கப்பட்டதன் பேரில், கடந்தாண்டு தேசிய தரச்சான்றும் கிடைத்தது. ஒரே வளாகத்தில், தடுப்பூசி செலுத்துதல், உணவு அளித்தல், ஆலோசனை வழங்குதல், விளையாடுவதற்கான இடவசதி போன்றவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
குழந்தைகள் டாக்டர்கள் கார்த்திகைமணிகண்டன், அமுதா, சிவசங்கர் ஆகியோர் அனைத்து குழந்தைகளுக்கு சிகிச்சையை அளிக்கின்றனர். நாள் ஒன்றுக்கு, 150 முதல் 200 வரையிலான குழந்தைகள், புறநோயாளிகளாக மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். குழந்தைகள் மீது கவனம் செலுத்தப்படுவதால், சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.

