/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அழகு முகம் தரும் நவீன தொழில்நுட்பம்!
/
அழகு முகம் தரும் நவீன தொழில்நுட்பம்!
ADDED : செப் 12, 2024 09:39 PM

'அழகு கலை சார்ந்த சிகிச்சைக்கு, கே.எம்.சி.எச்.,ல் நவீன தொழில்நுட்பமான பிக்கோசெகண்ட் லேசர் டெக்னாலஜி வாயிலாக, பாதுகாப்பான மற்றும் துல்லியமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது,' என, கோயம்புத்துார் மெடிக்கல் சென்டர் மருத்துவமனை தோல் மற்றும் அழகு கலை நிபுணர் டாக்டர் பவித்ரா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
சரும பராமரிப்பு மற்றும் அழகுக் கலை சார்ந்த சிகிச்சை முறைகளில் நவீன தொழில்நுட்பங்கள் நாள்தோறும் வளர்ந்து வருகின்றன. சருமத்தை மாசற்ற முறையில் பராமரிக்க மற்றும் புனரமைப்பு செய்ய இத்தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றில் பிக்கோசெகண்ட் லேசர் டெக்னாலஜி என்பது மிகவும் புதுமையானது மற்றும் நவீன மயமானதாகும். இது முக அழகுக்கும், உடல் முழுவதும் பயன்படுத்த ஏற்றது.
முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகள், முகத்தில் சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகள், மங்கு, கரும்புள்ளிகள், சருமத்தில் ஏற்படும் நிறமாற்றங்கள், தோல் சுருக்கம் மற்றும் வயது காரணமாக ஏற்படும் தோல் சம்பந்தப்பட்ட மாற்றங்களை சரி செய்ய இந்த பிக்கோ லேசர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது; டாட்டூ எனப்படும் பச்சை குத்திய அடையாளங்களையும் இதன் வாயிலாக அழிக்கலாம்.
இது விரைவான மற்றும் பாதுகாப்பான சிகிச்சை முறையாகும். இதில், அறுவை சிகிச்சை செயல்முறைகளோ, சருமத்தை துளையிட்டோ மேற்கொள்ளப்படுவதில்லை. உடலுக்குள் ஊடுருவாமல் வெளியில் இருந்து மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறை.
இத்தொழில்நுட்பத்தில், குறிப்பிட்ட தோல் பகுதிகளில் துல்லியமாக லேசர் கதிர்கள் செலுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, தோலின் பிற பகுதிகளில் பாதிப்பு ஏற்படாது. சுமார் ஒரு மணி நேரத்தில், சிகிச்சை முடிந்து விடும் என்பதால், மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. கே.எம்.சி.எச்.,ல் இதற்கான இச்சிகிச்சை அளிக்கப்படுகிறது; அனைத்து வசதிகளும் உள்ளன.
முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு, 74188 87411 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

