/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேனில் ஈரப்பதம்; பூச்சிக்கொல்லி பிரச்னையா? தீர்வு தருகிறது வேளாண் அறிவியல் மையம்
/
தேனில் ஈரப்பதம்; பூச்சிக்கொல்லி பிரச்னையா? தீர்வு தருகிறது வேளாண் அறிவியல் மையம்
தேனில் ஈரப்பதம்; பூச்சிக்கொல்லி பிரச்னையா? தீர்வு தருகிறது வேளாண் அறிவியல் மையம்
தேனில் ஈரப்பதம்; பூச்சிக்கொல்லி பிரச்னையா? தீர்வு தருகிறது வேளாண் அறிவியல் மையம்
ADDED : மே 23, 2024 11:16 PM
- நமது நிருபர் -
தமிழ்நாடு தேனீ வளர்ப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், உலக தேனீ தினத்தை முன்னிட்டு, கருத்தரங்கு நடந்தது.
கருத்தரங்கில், கோவை வேளாண் அறிவியல் மைய தலைவர் குமாரவடிவேலு பேசியதாவது: சந்தைப்படுத்துதல் பிரச்னை குறைவாக இருக்கும் பொருள் தேன். ஆனால், அதுவே தேங்கிக் கிடக்கிறது என்ற தகவல் கவலை அளிக்கிறது. கிலோ, 4,000 ரூபாய் வரை விலை நிர்ணயித்தாலும், வாங்குவதற்கு நாடுகள் உள்ளன.
அண்மையில், பொள்ளாச்சி பகுதி விவசாயிகள் ஏற்றுமதி செய்த தேன், நிராகரிக்கப்பட்டது. அதில், பூச்சிக்கொல்லிக்கான தடயங்கள் இருந்தன. தேனுக்கான சந்தையில், ஈரப்பதமும், பூச்சிக்கொல்லியும் இரு முக்கிய பிரச்னைகள்.
விவசாயத்தில் பூச்சிக்கொல்லியே வேண்டாம் என கூறவில்லை. தேவையான அளவில் மட்டும், அதுவும் அங்கீகரிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தலாம்.
பொதுவாக தேனீக்கள் காலையில் இருந்து, மதியம் 2:00 மணி வரை அதிகம் தேன் எடுக்கும். இந்த நேரத்தில் பூச்சி மருந்து அடிப்பதைத் தவிர்க்கலாம். இந்த விழிப்புணர்வை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.
தேனைப் பதப்படுத்தி, அதன் ஈரப்பதத்தைக் குறைத்து, பூச்சிக் கொல்லிகளின் தாக்கத்தைக் குறைத்து சந்தைப்படுத்தலாம். வேளாண் அறிவியல் மையம் (கே.வி.கே.,) சார்பில் சந்தை மையம் செயல்படுகிறது. மேலும் இரு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
தேனீ வளர்ப்பு, தேன் விற்பனை சார்ந்து விவசாயிகளுக்குத் தேவையான எந்தவொரு உதவியையும் செய்யத் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் புவனேஸ்வரி, வேளாண் பல்கலை பூச்சியியல் துறை பேராசிரியர் சீனிவாசன், கொங்குநாடு கல்லூரி விலங்கியல் துறை உதவி பேராசிரியர் ராஜேஷ்குமார், தேனீ வளர்ப்பு விவசாயிகள் சங்க தலைவர் ஜினோ, செயலர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.