/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பெண்களுக்கு பணம் ஆற்றல் கொடுக்கும்'
/
'பெண்களுக்கு பணம் ஆற்றல் கொடுக்கும்'
ADDED : மார் 04, 2025 06:30 AM

'வாகை சூடு' கருத்தரங்கில், கோவை எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்ட் உதவித் துணைத்தலைவர் யாசின் சாஹர் பேசியதாவது:
தேவைகளை பூர்த்தி செய்ய நிதி தேவை. பெண்கள் கையில் அதிகாரம் அளிப்பது குறித்து மிகவும் முக்கியமாக பேசப்படுகிறது. அதை பெற பணம் முக்கியமான ஒன்று. பணம், பெண்களுக்கு பணம் ஆற்றல் கொடுக்கும். அந்த ஆற்றல் வேறுவிதமானது.
அனைவரும் பணத்தை சம்பாதிப்பதுடன், அதை சேமிக்க வேண்டும். பணத்தை சம்பாதிக்க அதை முக்கியமான விசயங்களில் முதலீடு செய்வதும் இன்றியமையாதது. முதலீடும் ஒரு வகை சேமிப்பே. சம்பாதிக்கும் பணம் முழுவதையும் செலவு செய்யாமல் சேமிக்கவும், சேமிப்பை அதிகரிக்கவும் வேண்டும்.
இன்று மியூச்சுவல் பண்ட் முதலீடுகள் பாதுகாப்பானவை. அதை நிர்வகிக்க மேலாளர்கள் உள்ளனர். இன்று பலரும் மியூச்சுவல் பண்ட்களில், முதலீடு செய்து பெரியளவில் பயன் அடைந்துள்ளனர்.
அதில் குறைந்தளவு பணத்தையும் முதலீடு செய்யலாம். தங்கம், ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்வது போன்று, மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வதும் பலன் தரக்கூடியதே.
இவ்வாறு, அவர் பேசினார்.