/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கண்காணிப்பு தீவிரம்; வழியெங்கும் சிக்குது பணம்! ஆவணங்கள் இல்லாததால் சிக்கலோ சிக்கல்
/
கண்காணிப்பு தீவிரம்; வழியெங்கும் சிக்குது பணம்! ஆவணங்கள் இல்லாததால் சிக்கலோ சிக்கல்
கண்காணிப்பு தீவிரம்; வழியெங்கும் சிக்குது பணம்! ஆவணங்கள் இல்லாததால் சிக்கலோ சிக்கல்
கண்காணிப்பு தீவிரம்; வழியெங்கும் சிக்குது பணம்! ஆவணங்கள் இல்லாததால் சிக்கலோ சிக்கல்
ADDED : மார் 22, 2024 01:13 AM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை தொகுதியில், பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாயிலாக, முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி தொகுதியில், பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, முறையான ஆவணங்களின்றி பணம், பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என கண்காணிப்பு செய்யப்படுகிறது.
* தமிழக எல்லையான, கோாபாலபுரம் சோதனைச்சாவடியில், வணிகவரித்துறை உதவி அலுவலர் ஜான்சன்ராஜ் தலைமையில், நிலையான கண்காணிப்பு குழு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்ட போது, திண்டுக்கல்லை சேர்ந்த சங்கர், முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, 2.50 லட்சம் ரூபாய் கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
* துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமாமகேஸ்வரி தலைமையிலான பறக்கும் படை குழுவினர், நெகமம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அதில், பாலக்காடு சித்துாரை சேர்ந்த சேதுபதி முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, 88 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
* மீன்கரை ரோட்டில் வாகனத்தில் வந்த திண்டுக்கல்லை சேர்ந்த ஜெயராமன், வெங்கடாச்சலம் ஆகியோர் முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, 77 ஆயிரம் ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
* நடுப்புணியில், வாகனத்தில் வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த சுரேஷ்பாபு முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, 97ஆயிரம் ரூபாய் பணத்தை, நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
* கோபாலாபுரம் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் நிலையான கண்காணிப்புகுழுவினர் மேற்கொண்டனர். அவ்வழியாக வாகனத்தை சோதனை செய்த போது, பெரியபோது ஜம்புலிங்கம், முறையான ஆவணங்களின்றி, 90 ஆயிரம் ரூபாய் பணம் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்தனர்.
* ராமபட்டிணம் பகுதியில், நிலையான கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்த போது, அவ்வழியாக கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற, 150 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
* வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலை அருகே, கோவிந்தாபுரம் ரோட்டில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த கனரக வாகனத்தை தணிக்கை செய்தனர். அதில், முதலைமடாவை சேர்ந்த பம்பாதாசன், 87 ஆயிரம் ரூபாய் வைத்து இருந்தார். முறையான ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்து வருவாய்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
* மீன்கரை ரோடு வளந்தாயமரத்தில், பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டனர். அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தில், திண்டுக்கல்லை சேர்ந்த ராஜா முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, 1.10 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
* அதே பகுதியில், சரக்கு வாகனத்தில் வந்த திண்டுக்கல்லை சேர்ந்த சுபாஷ், முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, 85 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
* சங்கம்பாளையத்தில் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, நாமக்கல்லை சேர்ந்த முத்துசாமி என்பவர், 81 ஆயிரம் ரூபாய் பணத்தை கொண்டு வந்தது தெரிந்தது. முறையான ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்து, வருவாய்துறையிடம் ஒப்படைத்தனர்.
பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியில் நடந்த வாகன சோதனைகளில் மொத்தம், 9 லட்சத்து, 65 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
உடுமலை
உடுமலை தொகுதியில், 3 பறக்கும் படைகள், 3 நிலையான கண்காணிப்பு குழு மற்றும் இரண்டு வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர், தொடர்ந்து வாகனச்சோதனை, திடீர் ஆய்வு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
* உடுமலை, பொட்டிநாயக்கனுார் பிரிவு அருகே, நேற்று காலை கூடுதல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல், உடுமலை ராமசாமி நகரைச்சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் பின்னி, கொண்டு வந்த, 89,550 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், தாசில்தார் சுந்தரம், தேர்தல் பிரிவு தாசில்தார் சையது ராபியாம்மாள் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
* கோமங்கலம் புதுார் புதிய நான்கு வழிச்சாலை டோல்கேட் பகுதியில், கூடுதல் பறக்கும் படை - 1 குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பொள்ளாச்சி, மகாலிங்கபுரத்தில் இருந்து, காரில் வந்த சிவில் இன்ஜினியர் ராமச்சந்திரன், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த, 98,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
* உடுமலை - திருப்பூர் ரோட்டில், தனியார் பள்ளி அருகில், நிலை கண்காணிப்பு குழு - ஏ குழுவினர், வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த போது, காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த, 60,500 ரூபாய் பறிமுதல் செய்து, தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
உடுமலையில், நேற்று ஒரே நாளில், மூன்று குழுவினரால், மொத்தம், 2 லட்சத்து, 48 ஆயிரத்து, 550 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

