/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மொபட் விபத்து செக்யூரிட்டி பலி
/
மொபட் விபத்து செக்யூரிட்டி பலி
ADDED : ஆக 03, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்: கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கோபால் மகன் வேலு, 54. இவர் மாணிக்கம் பாளையத்தில் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 27ம் தேதி கருவலுாரில் இருந்து கோவில்பாளையம் செல்லும் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தவர் நிலை தடுமாறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு இறந்தார். அன்னூர் போலீசார் விசாரிக்கின்றனர்.