ADDED : பிப் 24, 2025 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர், ; கோவை, போத்தனூர் அடுத்து செட்டிபாளையம் செல்லும் வழியில், சங்கமம் நகரில் மதரஸ்த்துல் ஹீரா பள்ளிவாசல் உள்ளது. இதன் இரண்டாமாண்டு விழா, பள்ளிவாசல் தலைவர் ஷாஜஹான் தலைமையில் நடந்தது.
போட்டிகளில் வென்ற மதரஸா மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. செட்டிபாளையம் பேரூராட்சி தலைவர் ரங்கசாமி, சங்கமம் நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் முருகானந்தம், செயலாளர் அப்துல் ரஹீம் உள்ளிட்டோருக்கு பொன்னாடை போர்த்தி, திருக்குர்ஆன் புத்தகம் வழங்கப்பட்டது.
பள்ளிவாசல் துணைத்தலைவர் ஜாகிர் ஹுசேன், செயலாளர் அன்சர், இணை செயலாளர் நிஜாம் மற்றும் உறுப்பினர்கள், குடியிருப்போர் பங்கேற்றனர்.