/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புறநகர் குறுமைய போட்டிகள் மதர்லேண்ட் பள்ளி அணி வெற்றி
/
புறநகர் குறுமைய போட்டிகள் மதர்லேண்ட் பள்ளி அணி வெற்றி
புறநகர் குறுமைய போட்டிகள் மதர்லேண்ட் பள்ளி அணி வெற்றி
புறநகர் குறுமைய போட்டிகள் மதர்லேண்ட் பள்ளி அணி வெற்றி
ADDED : ஆக 07, 2024 11:09 PM
கோவை, -புறநகர் குறுமையத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இடையேயான, குழு விளையாட்டு போட்டிகளில் மதர்லேண்ட் பள்ளி அணி வெற்றி பெற்றது.
புறநகர் குறுமையத்துக்கு உட்பட்ட விளையாட்டு போட்டி, மதர்லேண்ட் பள்ளி சார்பில் நடத்தப்படுகிறது.
இதன் குழு விளையாட்டு போட்டிகள் பாரதியார் பல்கலை மைதானத்தில் நடந்து வருகின்றன.
போட்டிகளை, மதர்லேண்ட் பள்ளி நிறுவனர் கோவை தம்பி, தாளாளர் சீதா, முதல்வர் லதா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
முதல் நாள் மாணவியருக்கான குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவியருக்கு கால்பந்து, கோ கோ, த்ரோபால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
புறநகர் குறுமையத்துக்கு உட்பட்ட, 30க்கு மேற்பட்ட பள்ளிகளில் இருந்து, 1,000 மேற்பட்ட மாணவியர் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
மாணவியர் கைப்பந்து, 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில், மதர்லேண்ட் பள்ளி வெற்றி பெற்றது. இரண்டாம் இடத்தை டி.ஏ.ஆர்., மேல்நிலைப்பள்ளி பெற்றது.
17 வயதுக்குட்பட்டோ ருக்கான போட்டியில், மதர்லேண்ட் பள்ளி வெற்றி பெற்றது. இரண்டாம் இடத்தை டி.ஏ.ஆர்., மேல்நிலைப்பள்ளி பெற்றது.
19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில், டி.ஏ.ஆர்., மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது. இரண்டாம் இடத்தை மதர்லேண்ட் பள்ளி பெற்றது.
மாணவர்கள் கைப்பந்து, 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில், கணுவாய் அரசு பள்ளி முதலிடத்தையும், பிருந்தாவன் பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
மாணவியர் எறிபந்து, 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில், கீர்த்திமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், அவிலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
17 வயதுக்குட்பட்டோ ருக்கான போட்டியில், கீர்த்திமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், அவிலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
19 வயதுக்குட்பட்டோ ருக்கான போட்டியில், கீர்த்திமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், அவிலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
மாணவர் எறிபந்து, 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில், கீர்த்திமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், லிஸ்யூ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
போட்டிக்கான ஏற்பாடுகளை, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் தீபா, நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.