ADDED : ஏப் 28, 2024 11:31 PM
அ நிறம் | அளவு
அன்னுார்:அன்னுார் அருகே மோட்டார் பைக் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார், 27. டாக்டர். இவர் பொன்னேகவுண்டன்புதுார் அருகே, தனியார் கல்லூரியில் தங்கி முதுநிலை பட்டப்படிப்புக்கான நீட் தேர்வு பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 24ம் தேதி, கல்லுாரி முன் இவர் நிறுத்தி இருந்த புல்லட் பைக் திருட்டுப் போனது. இதுகுறித்து அன்னுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
நேற்று, அன்னுார் அருகே திருட்டுப் போன பைக் உடன் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன், 21, பிடிபட்டார். அவரிடம் இருந்து பைக் மீட்கப்பட்டது. பாலமுருகன் கைது செய்யப்பட்டு, அன்னுார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
