/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
என்.ஜி.பி., கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
என்.ஜி.பி., கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஜூன் 04, 2024 01:18 AM
கோவை;காளப்பட்டி ரோடு, டாக்டர் என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி மற்றும் எல் அண்ட் டி எஜூடெக் நிறுவனம் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், எல் அண்ட் டி எஜூடெக் மற்றும் டாக்டர் என்.ஜி.பி., கல்லுாரி இடையேயான கூட்டு முயற்சியில், வர்த்தகத்துறை மாணவர்களுக்கு, மதிப்பு கூட்டப்பட்ட படிப்புகள் வழங்கப்படவுள்ளன.
விநியோக சங்கிலி மேலாண்மை, நிதி பகுப்பாய்வு மற்றும் வணிக பகுப்பாய்வு ஆகியவற்றில், மாணவர்கள் தங்கள் கள அறிவை மேம்படுத்த, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும் என, கல்லுாரி முதல்வர் ராமமூர்த்தி தெரிவித்தார்.
நிகழ்வில், எல் அண்டு டி எஜூடெக் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் ஹேமா, மேலாளர் முனீஸ்வரன், கல்லுாரியின் துணை முதல்வர் சரவணன், வணிகவியல் டீன் பானுதேவி ஆகியோர் பங்கேற்றனர்.