/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்துஸ்தான் கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
இந்துஸ்தான் கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : மே 11, 2024 12:37 AM
கோவை:இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியின்,கணினி அறிவியல் மற்றும் அறிவாற்றல் துறை, டாடா கன்சல்டன்சி நிறுவனத்துடன் இணைந்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்நிகழ்வில் டாடா கன்சல்டன்சி அமைப்பின் தலைவர் சுசீந்திரன், மண்டலத் தலைவர் ஸ்டீபன் தினகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். மாணவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர். தொடர்ந்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்துஸ்தான் கல்லுாரியின் நிர்வாக செயலாளர் பிரியா மற்றும் சுசீந்திரன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் குறித்து, மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. இந்துஸ்தான் கல்லுாரியின் செயலாளர் சரஸ்வதி, முதல்வர் பொன்னுசாமி, கணினி அறிவியல் மற்றும் அறிவாற்றல்துறைத் தலைவர் சசிகலா ஆகியோர், நிகழ்வில் கலந்து கொண்டனர்.