/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.பி.எஸ்.இ., நியமன தேர்வில் ஹிந்திக்கு கூடுதல் மதிப்பெண்: எம்.பி., வெங்கடேசன் கண்டனம்

ADDED : ஜூலை 07, 2024 10:16 PM
கோவை:சி.பி.எஸ்.இ., நியமன தேர்வில், ஹிந்தி மொழிக்கு 10 சதவீத கூடுதல் மதிப்பெண்கள் வழங்கும் வகையில், தேர்வு வடிவமைக்கப்பட்டிருப்பதற்கு, எம்.பி., வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சி.பி.எஸ்.இ.,யில், உதவி செயலர், இளநிலை மொழிபெயர்ப்பாளர், இளநிலை கணக்காளர், அக்கவுன்ட்ஸ் ஆபிசர் உள்ளிட்ட, ஆசிரியப் பணி அல்லாத, 118 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வரும் ஆக.,3ம் தேதி முதல் 3 கட்டங்களாக தேர்வு நடக்கிறது. இதில், ஒரு பிரிவில் ஹிந்தி மொழித்திறனுக்கு 30 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்றொரு பிரிவில், 15 மதிப்பெண்கள் ஹிந்திக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எம்.பி., வெங்கடேசன், கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:
சி.பி.எஸ்.இ., நியமனத் தேர்வில், ஹிந்திக்கு 10 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படுவதால், ஹிந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்கள், எழுதும்போதே 10 சதவீத மதிப்பெண்கள் பின்தங்கி விடுவர். இது ஹிந்தி பேசாத குறிப்பாக, தமிழக தேர்வர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இதை திரும்பப் பெற வேண்டும்.
சமீபத்திய தேர்தல் முடிவுகளில் இருந்து, பா.ஜ. அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை. சமஸ்கிருதத்தையும், ஹிந்தியையும் உயர்த்திப்பிடிக்கிறது. பார்லி., கட்டடத்தின் 6 வாசல்களுக்கும் சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அலுவல்கள், 90 சதவீதம் ஹிந்தியில் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு, வெங்கடேசன் தெரிவித்தார்.