/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எம்.ஆர்.எம்., சுவர் இடிந்து குடியிருப்புகள் சேதம்
/
எம்.ஆர்.எம்., சுவர் இடிந்து குடியிருப்புகள் சேதம்
ADDED : ஆக 01, 2024 12:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக கழகம் குடோன் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் குடியிருப்புகள் சேதமடைந்தன.
பொள்ளாச்சி நகராட்சி, 34வது வார்டு பி.கே.எஸ்., காலனியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் குடோனின் கிழக்கு பகுதி காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது. அதில், அங்குள்ள சொப்னா, தினேஷ்குமார், மாரியம்மாள் ஆகியோர் வீட்டின் பின்புற சுவர் சேதமடைந்தது.
எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், சேதமடைந்த பகுதியை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். உரிய நிவாரணம் வழங்குமாறு, சப் - கலெக்டரிடம் போனில் தொடர்பு கொண்டு பரிந்துரை செய்தார்.