/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எம்.எஸ்சி., புதிய படிப்பு துவக்கம்
/
எம்.எஸ்சி., புதிய படிப்பு துவக்கம்
ADDED : மே 31, 2024 01:18 AM
கோவை;பாரதியார் பல்கலையில் இக்கல்வியாண்டு முதல், எம்.எஸ்சி., பயோ ஸ்டேட்டிஸ்டிக்ஸ், எனப்படும் உயிரி புள்ளியியல்படிப்பு, புதிதாக துவக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பை முடிப்பவர்கள், அரசின் சுகாதாரத்துறையின் பல்வேறு பிரிவுகள், புள்ளியியல் ஆய்வாளர், கண்காணிப்பாளர், புலனாய்வாளர், ஆராய்ச்சி பிரிவுகளில் பணி வாய்ப்பு, அரசு மற்றும் தனியார் மருந்து அரசு நிறுவனங்கள், மருத்துவ கல்லுாரிகளில் விரிவுரையாளராகவும் சேர இயலும்.
இப்படிப்பில் சேரவிரும்பும் மாணவர்கள் ஜூன் 6 மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.இலவச கல்வி, இடஒதுக்கீடு, சேர்க்கை நடைமுறைகளை, https://b-u.ac.in/ எனும் பல்கலை இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ள பல்கலை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.