/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.44.78 கோடி செலவிட்டும் வீணாக கிடக்கிறது 'மல்டிலெவல் பார்க்கிங்'
/
ரூ.44.78 கோடி செலவிட்டும் வீணாக கிடக்கிறது 'மல்டிலெவல் பார்க்கிங்'
ரூ.44.78 கோடி செலவிட்டும் வீணாக கிடக்கிறது 'மல்டிலெவல் பார்க்கிங்'
ரூ.44.78 கோடி செலவிட்டும் வீணாக கிடக்கிறது 'மல்டிலெவல் பார்க்கிங்'
ADDED : மார் 03, 2025 04:15 AM

கோவை : 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், ரூ.44.78 கோடியில், கோவை ஆர்.எஸ்.புரத்தில் கட்டப்பட்ட 'மல்டிலெவல் கார் பார்க்கிங்' பயன்பாடின்றி உள்ள சூழலில், ரேஸ்கோர்ஸ் பகுதியில், ரூ.9.5 கோடியில் புதிதாக 'மல்டிலெவல் பார்க்கிங்' வளாகம் அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
ஆர்.எஸ்.புரம் 'மல்டிலெவல் கார் பார்க்கிங்,' பேரிடர் சமயங்களில் பொருட்கள் இருப்பு வைப்பதற்கான, குடோனாக பயன்படுத்தப்படுகிறது.
இச்சூழலில், ரேஸ்கோர்ஸ் பகுதியில் கே.ஜி., தியேட்டர் எதிரே உள்ள சாலைத்தீவுத்திடல் பூங்கா பகுதியை சமப்படுத்தி, அவ்விடத்தில் தற்காலிகமாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்விடத்தில், 'மல்டிலெவல் பார்க்கிங்' வளாகம் ஏற்படுத்த ரூ.9.5 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அரசு கலை கல்லுாரி ரோட்டில் நிறுத்தும் வாகனங்களை தடுப்பதற்காக, இவ்வளாகம் கட்டப்படுவதாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.
இப்படியும் செய்யலாம்!
சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, வணிக வளாகங்களில் உள்ள 'பார்க்கிங்' பகுதிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், ரோட்டில் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்கலாம்.
அரசு கலை கல்லுாரி ரோட்டில் வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்த, ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்துக்குள், 'பார்க்கிங்' வளாகம் ஏற்படுத்தலாம். வக்கீல்கள் மற்றும் மாஜிஸ்திரேட்டுகள், நீதிபதிகள் வாகனங்கள், அவ்வளாகத்துக்குள் பாதுகாப்பாக நிறுத்துவதற்கு வசதி கிடைக்கும். கோர்ட்டுக்கு வரும் மற்றவர்களின் வாகனங்கள் நிறுத்தவும் வாய்ப்பு உருவாக்கலாம்.