/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வளர்ச்சி பணிகளின் தரம் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
/
வளர்ச்சி பணிகளின் தரம் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
ADDED : மே 29, 2024 12:36 AM
கோவை;கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளின் தரத்தை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.
சிங்காநல்லுார் இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகில், 2.2 கி.மீ., துாரத்துக்கு ரூ.4.5 கோடியில் மழை நீர் வடிகால் கட்டப்படுகிறது. மசக்காளிபாளையம் ரோடு லால் பகதுார் நகர், லட்சுமிபுரம் பகுதியில், 24 மணி நேர குடிநீர் திட்ட பணி, தண்ணீர் பந்தல் ரோட்டில் சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
பின், கலெக்டர் அலுவலகம் முன் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் பொங்குவதை தவிர்க்க, அடைப்பு நீக்கும் பணியை, மாநகராட்சி கமிஷனர் பார்வையிட்டு, அறிவுரை வழங்கினார்.
அப்போது, உதவி கமிஷனர் கவிதா, நகர துணை பொறியாளர் கருப்பசாமி, உதவி நிர்வாக பொறியாளர் ஹேமலதா உட்பட பலர் உடனிருந்தனர்.