
செய்முறை:
காளான் பெப்பர் பிரை செய்ய முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் மனம் வரும் வரை வதக்கவும். பிறகு அதை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.
பிறகு அதே கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கருவேப்பிலை, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் குடை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
இதனை அடுத்து அதில் காளானையும் சேர்த்து நன்கு வதக்கவும். காளானில் இருந்து தண்ணீர் வெளி வந்ததும், அதில் மிளகுத்துாள், மல்லித்துாள், மிளகாய்த்துாள் மற்றும் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை நன்கு முறை கிளறி விடுங்கள். அடுப்பை குறைவான தீயில் வைத்து வதக்கிக் கொண்டே இருங்கள். பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடுங்கள். இறுதியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை துாவி இறக்கவும். அவ்வளவுதான் டேஸ்டான காளான் பெப்பர் பிரை தயார்.